Translate

Thursday, August 7, 2014

நடிகர் தனுஷ் கைது செய்யப்பட்டதாக வதந்தி. சென்னையில் பெரும் பரபரப்பு……!


இன்று காலை முதல் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மருமகனுமாகிய தனுஷ் கைது செய்யப்பட்டார் என்ற பரபரப்புதான் அது.

சமீபத்தில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி குறித்து அவதூறாக வசனம் பேசிய தனுஷ், இந்த படத்தை இயக்கிய வேல்ராஜ் ஆகியோர்களுக்கு அந்த பள்ளியின் நிர்வாகம் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்கும்படி படக்குழுவினர்களை பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால் தியேட்டர்களில் இன்னும் அந்த வசனம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. எனவே ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாகிகளின் புகாரை ஒட்டி தனுஷ் கைது செய்யப்பட்டதாக ஒரு சில இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், தனியார் எப்.எம். வானொலிகளிலும் செய்திகள் வெளிவந்தன.


all caught up